கார் மோதியது; 5 பேர் காயம்
சாலையோரம் நடந்து சென்றவர்கள் மீது கார் மோதியது; கர்ப்பிணி உள்பட 5 பேர் காயம்
உசிலம்பட்டி
உசிலம்பட்டி-பேரையூர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது வேகமாக வந்த கார் அடுத்தடுத்து மோதியது. இதில் கள்ளபட்டியைச் சேர்ந்த ரஞ்தித் மனைவி சுப்புலட்சுமி(வயது 21), ராஜக்காபட்டியை சேர்ந்த மலைச்சாமி(50), வி.பெருமாள்பட்டியைச் சேர்ந்த பழனிச்சாமி மனைவி கல்பனா(37), ஒத்தப்பாறைப்பட்டியை சேர்ந்த சுந்தரம்(72), உத்தப்பநாயக்கனூரை சேர்ந்த முத்துலட்சுமி(45) ஆகிய 5 பேர் காயமடைந்தனர். இதில் சுப்புலட்சுமி கர்ப்பிணி ஆவார். இந்த 5 பேரையும் மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி போலீசார், கார் டிரைவர் நாகப்பட்டிணத்தைச் சேர்ந்த தென்னரசு என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சாலையில் நடந்து சென்ற பொதுமக்கள் மீது கார் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் உசிலம்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story