பாளையங்கோட்டையில் நாளை நெல் திருவிழா கலெக்டர் விஷ்ணு தகவல்


பாளையங்கோட்டையில் நாளை நெல் திருவிழா கலெக்டர் விஷ்ணு தகவல்
x
தினத்தந்தி 12 May 2022 1:22 AM IST (Updated: 12 May 2022 1:22 AM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டையில் நாளை நெல் திருவிழா நடக்கிறது.

நெல்லை:
நெல் திருவிழா
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-
நெல்லை மாவட்டம் அதன் பெயருக்கு ஏற்றார்போல் அதிகமாக நெல் பயிரிடும் மாவட்டம் ஆகும். இந்த மாவட்டத்தில் 80 சதவீதம் நெல் மட்டுமே பயிரிடப்படுகிறது. வற்றாத ஜீவநதியான தாமிரபரணி தண்ணீரை பயன்படுத்தி நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.
இதையொட்டி முதன் முதலாக ‘நெல் திருவிழா’ நாளை (வௌ்ளிக்கிழமை) பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெறுகிறது. விழாவுக்கு சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்குகிறார். 
நெல் விதை தொடங்கி அது அறுவடையாகி தானியம் ஆகும் வரை உள்ள அனைத்து தொழில் நுட்பங்கள், இயற்கை முறையில் சாகுபடி செய்வதன் நன்மைகள் குறித்து கருத்துக்காட்சிகளும், விரிவான விளக்கமும் தரப்பட இருக்கிறது. மண்பரிசோதனை, தரமான நெல்விதைகள் உற்பத்தி, பூச்சி, நோய் தாக்குதல் தவிர்க்க முறையான விதை நேர்த்தி, பாய் நாற்றங்கால், நேரடி நெல் விதைப்பு, ஒருங்கிணைந்த உரநிர்வாகம், ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் நிர்வாகம், களை நிர்வாகம், நீர் மேலாண்மை மற்றும் அறுவடை வரையிலான அனைத்து தொழில்நுட்பங்கள் குறித்து வல்லுனர்கள் விளக்கம் அளிக்கிறார்கள்.
விவசாயிகள் பங்கேற்க வேண்டுகோள்
வேளாண் பொறியியல் துறை மூலமாக நெல் சாகுபடிக்கு பயன்படும் எந்திர தொகுப்புகளின் கண்காட்சியும் இடம் பெற இருக்கிறது. நெல் சாகுபடியில் சிறந்த விளங்கும் முன்னோடி விவசாயிகளின் அனுபவங்களும் காட்சிப்படுத்தப்பட இருக்கிறது. இந்த நெல் திருவிழாவில் அனைத்து விவசாயிகளும் திரளாக கலந்து கொண்டு பயன்பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.

Next Story