மாட்டு வண்டியில் மணல் கடத்திய 3 பேர் கைது

மணிகண்டம், மே.12-
மணிகண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது செங்குறிச்சி அருகே சாலையில் சென்ற 3 மாட்டு வண்டிகளை நிறுத்தி சோதனை நடத்தியதில் கோரையாற்றில் மணல் அள்ளி கடத்தி வந்தது தெரியவந்தது. கடத்தி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து மணலுடன் மாட்டுவண்டிகளை பறிமுதல் செய்த போலீசார் மணல் கடத்திய கீழபஞ்சப்பூர் சுப்பையா மகன்கள் வெள்ளைச்சாமி (வயது 38), பாண்டியன் (35), அதே ஊரை சேர்ந்த செல்லையா (52) ஆகிய 3 பேரை கைது செய்தனர் இதுகுறித்து மணிகண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்ட 3 பேரையும் திருச்சி ஜே.எம். 4 கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Tags :
Next Story