திரவுபதி அம்மன் கோவில் பூக்குழி இறங்கும் விழா


திரவுபதி அம்மன் கோவில் பூக்குழி இறங்கும் விழா
x
தினத்தந்தி 11 May 2022 7:57 PM GMT (Updated: 11 May 2022 7:57 PM GMT)

திரவுபதி அம்மன் கோவில் பூக்குழி இறங்கும் விழா

சோழவந்தான்
சோழவந்தான் மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழாவில் நேற்று பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. காலை வைகை ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து பூக்குழி மைதானத்தில் தெளித்தனர். பின்னர் பூ வளர்த்தனர். மதியம் 2 மணியளவில் அம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு பூக்குழி மண்டகப்படியில் வந்து சேர்ந்தது. அங்கு அம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்று காமதேனு வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை 6 மணியளவில் பக்தர்கள் பூக்குழி இறங்கினார்கள். இதைத்தொடர்ந்து அம்மன் சங்கங்கோட்டை கிராமம், முதலியார்கோட்டை கிராமம், ெரயில்வே பீடர்ரோடு வழியாக மார்க்கெட் ரோடு, நான்குரதவீதிகளில் பவனி வந்து கோவிலை வந்தடைந்தது. சங்கங்கோட்டை கிராமத்தார்கள் பூக்குழி திருவிழா ஏற்பாடுகளை செய்துள்ளனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவபாலன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story