பெரிய குளத்தில் மீன்பிடி திருவிழா
பெரிய குளத்தில் மீன்பிடி திருவிழா
மணப்பாறை, மே.12-
மணப்பாறையை அடுத்த பொன்னுசிங்கம்பட்டியில் உள்ள சீகம்பட்டி பெரியகுளம் கடந்த ஆண்டு பெய்த மழையால் முழுமையாக நிரம்பியது. இந்த குளத்தில் ஆண்டுதோறும் மீன்பிடி திருவிழா நடத்தப்படும். ஆனால் போதிய மழை பெய்யாததால் 25 ஆண்டுகளாக நிரம்பவில்லை. இதனால் மீன்பிடி திருவிழாவும் 25 ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. ஆனால் இந்த ஆண்டு நல்ல மழை பெய்து பெரியகுளம் நிரம்பியது. இதனால் 25 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று மீன்பிடி திருவிழா நடத்தப்பட்டது. இதில் சீகம்பட்டி, ராயம்பட்டி, பொன்னுசிங்கம்பட்டி உள்ளிட்ட கிராம மக்கள் மட்டுமின்றி அருகில் உள்ள புதுக்கோட்டை மாவட்ட கிராம மக்களும் பங்கேற்று மீன்களை பிடித்தனர். முன்னதாக 3 ஊரின் முக்கியஸ்தர்கள் துண்டை அசைத்து மீன்பிடிக்க உத்தரவு வழங்க மக்கள் போட்டி போட்டுக் கொண்டு 15 நிமிடங்களில் குளத்தில் இருந்த மொத்த மீன்களையும் கொத்து கொத்தாக அள்ளிச் சென்றனர். இதில் கட்லா, விரா, குரவை, கெழுத்தி உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் கிடைத்ததால் மக்கள் மகிழ்ச்சியோடு எடுத்துச் சென்றனர்.

Related Tags :
Next Story