பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
சோமரசம்பேட்டை, மே.12-
திருச்சி ராம்ஜி நகரில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாகவும், அந்த விற்பனையை தடுக்க கோரி திருச்சி கண்டோன்மென்ட் மற்றும் மணிகண்டம் மண்டல பா.ஜ.க. சார்பில் ராம்ஜி நகர் மில்கேட் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மணிகண்டம் மண்டல தலைவர் சிவமூர்த்தி தலைமை தாங்கினார்.
மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகர், மாநகர் மாவட்ட பொதுச்செயலாளர் ஒண்டி முத்து முன்னிலை வகித்தனர். இதில் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட பார்வையாளரும் மாநில இணை பொருளாளருமான சிவசுப்பிரமணியன் சிறப்புரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க.வினர் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story