ரேஷன் கடை ஊழியர் கொலை: 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


ரேஷன் கடை ஊழியர் கொலை: 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 11 May 2022 8:10 PM GMT (Updated: 2022-05-12T01:40:51+05:30)

ரேஷன் கடை ஊழியர் கொலையில் 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

நெல்லை:
நெல்லை மேலப்பாளையம் ராஜா நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் வெங்கடாஜலபதி. ஓய்வு பெற்ற ரேஷன் கடை ஊழியர். இவரை கடந்த ஏப்ரல் மாதம் 14-ந்தேதி ஒரு கும்பல் வெட்டி கொலை செய்தனர்.
இதுதொடர்பாக மேலப்பாளையத்தை சேர்ந்த கரியப்பா மகன் சிவபாலன் (வயது 44), கணபதி மகன் சுடலை பாண்டி (46) மற்றும் பெருமாள்புரத்தை சேர்ந்த அப்பாக்குட்டி மகன் அடைக்கலம் (43) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
இவர்கள் 3 பேரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்திருக்க நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ்குமார் உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை மேலப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துசுப்பிரமணியன் நேற்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் சமர்ப்பித்தார்.

Next Story