வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள 170 பேருக்கு இலவச கியாஸ் அடுப்பு


வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள 170 பேருக்கு இலவச கியாஸ் அடுப்பு
x
தினத்தந்தி 11 May 2022 8:15 PM GMT (Updated: 2022-05-12T01:45:51+05:30)

ஆலடிக்குமுளை ஊராட்சியில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள 170 பேருக்கு இலவச கியாஸ் அடுப்பு

கரம்பயம்:
பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆலடிக்குமுளை ஊராட்சியில் கடந்த ஜனவரி மாதம் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மத்திய அரசின் பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தில் இலவச எரிவாயு அடுப்பு வழங்கும் திட்டத்தின் முகாம் நடைபெற்றது. முகாமில் ஆலடிக்குமுளை, நாடார் தெரு, நறுவழிக்கொல்லை, சுக்கிரன்பட்டி, வீரக்குறிச்சி, எம்.என்.தோட்டம், சூராங்காடு, சமத்துவபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் தங்களுக்கு மத்திய அரசின் இலவச கியாஸ் அடுப்பு வழங்க வேண்டும் என்று மனு அளித்திருந்தனர். அந்த மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு மத்திய அரசின் இலவச கியாஸ் அடுப்பு 170 பேருக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான நிகழ்ச்சியில், ஆலடிக்குமுளை முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் இளங்கோ, அரசு பள்ளி வளர்ச்சி குழு பொதுச்செயலாளர் புகழேந்தி மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆகியோர் பயனாளிகளின் வீடுகளுக்கே சென்று கியாஸ் அடுப்பு, ஒரு எரிவாயு சிலிண்டர், ரெகுலேட்டர் ஆகியவற்றை வழங்கினர். இதில், 20 பயனாளிகள் வீட்டில் இல்லாததால் 150 பேருக்கு மட்டும் வழங்கப்பட்டது. மற்ற 20 பேரும் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வந்து பெற்றுக்கொள்ளலாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

Next Story