நெல்லை பேட்டையில் சமையல் எண்ணெய், சாக்லேட்டுகள் பறிமுதல்


நெல்லை பேட்டையில் சமையல் எண்ணெய், சாக்லேட்டுகள் பறிமுதல்
x
தினத்தந்தி 11 May 2022 8:15 PM GMT (Updated: 2022-05-12T01:45:56+05:30)

நெல்லை பேட்டையில் சமையல் எண்ணெய், சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

நெல்லை:
நெல்லை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் சசிதீபா, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் செல்லபாண்டி, முத்துராஜா ஆகியோர் நெல்லை பேட்டை பகுதியில் உள்ள ஓட்டல்கள், பேக்கரிகளில் நேற்று திடீர் ஆய்வு நடத்தினார்கள். அப்போது திரும்ப, திரும்ப சமையல் செய்ய பயன்படுத்திய எண்ணெய் 120 லிட்டர் பறிமுதல் செய்யப்பட்டது. ஒருமுறை சமையலுக்கு பயன்படுத்திய எண்ணெயை அரசு வழிகாட்டுதல்படி பயோ-டீசலாக மாற்ற ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
இதேபோல் சாக்லேட் மற்றும் மிட்டாய் மொத்த வியாபாரிகள் கடைகளிலும் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது உணவு பாதுகாப்பு துறை உரிமம் பெறாத 25 கிலோ மிட்டாய் மற்றும் சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மாதிரிகள் பகுப்பாய்வுக்கு பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும் பிளாஸ்டிக் பைகளும் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு, உரிமம் இல்லாத கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டும் எச்சரிக்கப்பட்டனர்.

Next Story