ஒருதலை காதல் பிரச்சினை வாலிபருக்கு தர்ம அடி


ஒருதலை காதல் பிரச்சினை வாலிபருக்கு தர்ம அடி
x
தினத்தந்தி 11 May 2022 8:18 PM GMT (Updated: 2022-05-12T01:48:10+05:30)

ஒருதலை காதல் பிரச்சினையால் வாலிபருக்கு தர்ம அடி விழுந்தது.

நெல்லை:
நெல்லை மாவட்டம் வள்ளியூர் பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர் சென்னையில் கார் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவர் நெல்லையில் உள்ள வங்கியில் பணிபுரிந்து வரும் இளம்பெண்ணை 6 ஆண்டுகளாக ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று அந்த பெண் வேலை செய்யும் வங்கிக்கு சென்று, பெண்ணுக்கு தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதுபற்றி தகவல் அறிந்த பெண்ணின் தந்தை, உறவினர்கள் அந்த வாலிபரை தேடி, மதுரை ரோட்டில் ஒரு ஓட்டல் முன்பு சுற்றி வளைத்து பிடித்து, தர்ம அடி கொடுத்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த நெல்லை சந்திப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துகுமரன் மற்றும் போலீசார் அந்த வாலிபரை மீட்டனர்.
இதுதொடர்பாக 2 தரப்பினரிடமும் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மதுரை ரோடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story