கார் மோதி வாலிபர் படுகாயம்; பொதுமக்கள் சாலை மறியல்


கார் மோதி வாலிபர் படுகாயம்; பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 12 May 2022 1:51 AM IST (Updated: 12 May 2022 1:51 AM IST)
t-max-icont-min-icon

கார் மோதி வாலிபர் படுகாயம்; பொதுமக்கள் சாலை மறியல்

கொள்ளிடம் டோல்கேட், மே.12-
பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் பகுதியை சேர்ந்தவர் ஜாவித் (வயது 25), இவர் திருச்சி மாவட்டம், திருவளர்சோலை அருகே உள்ள பனையபுரம் பகுதியில் எரிவாயு குழாய் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். இந்த நிலையில் ஜாவித் அருகே உள்ள கடைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். கல்லணை - திருச்சி சாலையில் சென்ற போது,  கும்பகோணத்தில் இருந்து திருச்சி நோக்கி வந்த கார் ஜாவித் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தகவலறிந்த பனையபுரம் கிராம மக்கள் கல்லணை - திருச்சி சாலையில் இதுபோன்ற விபத்துகள் அடிக்கடி நிகழ்ந்து உயிர்சேதம் ஏற்பட்டு வருகிறது. எனவே விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டு்ம் என்று வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இது தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை அடுத்து அவர்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் சுமார் அரைமணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் போக்குவரத்தை சீர் செய்து பனையபுரம் பஸ் நிறுத்தம் அருகே விபத்தை கட்டுப்படுத்தும் வகையில் தற்காலிகமாக இரும்பு பலகையை வைத்தனர்.

Next Story