ஆற்றுப்பாலம் அருகே மீண்டும் படித்துறை கட்டப்படுமா?


ஆற்றுப்பாலம் அருகே மீண்டும் படித்துறை கட்டப்படுமா?
x
தினத்தந்தி 11 May 2022 8:25 PM GMT (Updated: 2022-05-12T01:55:50+05:30)

செருவாவிடுதி ஆற்றுப்பாலம் அருகே மீண்டும் படித்துறை கட்டப்படுமா?

திருச்சிற்றம்பலம்:
திருச்சிற்றம்பலம் அருகே செருவாவிடுதி தெற்கு பகுதியில், புதுப்பட்டினம் 1-ம் நம்பர் கிளை வாய்க்கால் செல்கிறது. திருச்சிற்றம்பலம்- செருவாவிடுதி மெயின் சாலையை ஒட்டி உள்ள இந்த கிளை வாய்க்கால் ஆற்றுப்பாலத்தின் கீழ் பகுதியில் பொதுமக்கள் குளிப்பதற்காக பல ஆண்டுகளுக்கு முன்பு படித்துறை கட்டப்பட்டது. அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இந்த படித்துறையை பயன்படுத்தி வந்தனர்.  பின்னர், இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பாலம் விரிவாக்கப் பணியின்போது படித்துறை அகற்றப்பட்டு விட்டது.  அகற்றப்பட்ட படித்துறை பகுதியில் தற்போது குப்பைகளும், கழிவு பொருட்களும் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால், சுகாதார கேடு ஏற்படுகிறது.
 இதனை தவிர்க்கும் பொருட்டு, செருவாவிடுதி ஆற்றுப்பாலத்தில் மீண்டும் படித்துறை கட்டி பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Next Story