மயக்க மருந்து கொடுத்து சிறுமி பலாத்காரம்; குண்டர் சட்டத்தில் மேலும் ஒருவர் கைது
மயக்க மருந்து கொடுத்து சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
ஜெயங்கொண்டம்,
சிறுமி பலாத்காரம்
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 15 வயது சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் உடையார்பாளையம் தெற்கு தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தியின் மனைவி சாந்தா (வயது 30), கீழப்பழுவூரை சேர்ந்த பால்ராஜின் மனைவி சந்திரா (38), அமிர்தராயன்கோட்டை கிராமத்தை சேர்ந்த நாகராஜின் மனைவி இந்திரா (40) உள்பட மொத்தம் 12 பேரை ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் 3 பெண்கள் உள்பட 11 பேர் மீது ஏற்கனவே குண்டர் தடுப்பு சட்டத்தில் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குண்டர் சட்டத்தில் கைது
இந்தநிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய கீழப்பழுவூரை சேர்ந்த ராஜேந்திரன் (62) என்பவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரை செய்தார். அதன்பேரில் ராஜேந்திரனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு நகல் அவரிடம் வழங்கப்பட்டது.
இவ்வழக்கில் தொடர்புடைய 12 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story