பிளஸ்-2 கணினி அறிவியல் தேர்வினை 58 பேர் எழுதவில்லை


பிளஸ்-2 கணினி அறிவியல் தேர்வினை 58 பேர் எழுதவில்லை
x
தினத்தந்தி 11 May 2022 8:36 PM GMT (Updated: 2022-05-12T02:06:19+05:30)

அரியலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 கணினி அறிவியல் தேர்வினை 58 பேர் எழுதவில்லை.

அரியலூர், 
தமிழகத்தில் தற்போது 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு அரசு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. நேற்று பிளஸ்-2 வகுப்புக்கு கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள் ஆகிய பாடங்களுக்கான தேர்வுகள் நடந்தது. அரியலூர் மாவட்டத்தில் கணினி அறிவியல் தேர்வு எழுத தகுதி பெற்றிருந்த 1,837 மாணவ-மாணவிகளில், 1,150 மாணவர்களும், 629 மாணவிகளும் தேர்வு எழுதினர். 26 மாணவர்களும், 32 மாணவிகளும் தேர்வு எழுத வரவில்லை. இதேபோல் மாவட்டத்தில் கணினி பயன்பாடுகள் தேர்வினை எழுத தகுதி பெற்றிருந்த 772 மாணவ-மாணவிகளில், 391 மாணவர்களும், 367 மாணவிகளும் தேர்வு எழுதினர். தலா 7 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை. மேற்கண்ட 2 தேர்வுகளிலும் ஒழுங்கின செயல்களில் ஈடுபட்டதாகவும், காப்பி அடித்ததாகவும் யாரும் பிடிபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இன்று (வியாழக்கிழமை) பிளஸ்-1 மாணவ-மாணவிகளுக்கு ஆங்கில தேர்வு நடக்கிறது. நாளை (வெள்ளிக்கிழமை) பிளஸ்-2 வகுப்புக்கு வேதியியல், கணக்கு பதிவியல் பாடங்களுக்கான தேர்வும், 10-ம் வகுப்புக்கு வருகிற 18-ந்தேதி ஆங்கில தேர்வும் நடக்கிறது.

Next Story