மாவட்ட செய்திகள்

பெரம்பலூரில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் + "||" + Employment Camp

பெரம்பலூரில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

பெரம்பலூரில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
பெரம்பலூரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது.
பெரம்பலூர், 
பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் நடைபெறுகிறது. எனவே முகாமில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த சிறு, குறு மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான நபர்களை அவர்களது நிர்வாகிகளை கொண்டோ அல்லது நேரில் வந்தோ தேர்வு செய்து கொள்ளலாம். இது ஒரு இலவசப்பணியே ஆகும். மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பிரபல தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களது காலிப்பணியிடங்களை கல்வித்தகுதிகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளதால் இம்முகாமிற்கு 10, 12-ம் வகுப்பு முடித்தவர்கள், ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு முடித்த இருபாலரும் கலந்து கொள்ளலாம். இதன் மூலம் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு, அவர்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. எனவே இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களும், தனியார்துறை நிறுவனங்களும் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

தொடர்புடைய செய்திகள்

1. தர்மபுரியில், 13-ந்தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
தர்மபுரியில், 13-ந்தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
2. வேலைவாய்ப்பு முகாம் மூலம் 15 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை - செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர்
செங்கல்பட்டு மாவட்டத்தில் 15 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணி நியமன ஆணை வழங்கப்பட்டு உள்ளது என மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் தெரிவித்துள்ளார்.
3. தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்-பெரம்பலூரில் நாளை நடக்கிறது
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் பெரம்பலூரில் நாளை நடக்கிறது.
4. வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தனியார் வேலைவாய்ப்பு முகாம்
வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தனியார் வேலைவாய்ப்பு முகாம் 29-ந் தேதி சிவகங்கையில் நடக்கிறது
5. ராணிப்பேட்டையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
ராணிப்பேட்டையில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் 29-ந்தேதி நடக்கிறது.