ஏற்காட்டில் போட்டோ ஸ்டூடியோவில் தீ விபத்து ரூ.20 லட்சம் பொருட்கள் எரிந்து சேதம்


ஏற்காட்டில் போட்டோ ஸ்டூடியோவில் தீ விபத்து ரூ.20 லட்சம் பொருட்கள் எரிந்து சேதம்
x
தினத்தந்தி 11 May 2022 8:54 PM GMT (Updated: 2022-05-12T02:24:07+05:30)

ஏற்காட்டில் போட்டோ ஸ்டூடியோவில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.20 லட்சம் பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன.

ஏற்காடு,
ஓமலூரை சேர்ந்தவர் சவுந்தரராஜன் (வயது 54). இவர் ஏற்காடு பஸ் நிலையம் அருகே உள்ள கடைவீதியில் கடந்த 10 ஆண்டுகளாக போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருகிறார். இவர் வழக்கம் போல் நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் யாரும் எதிர்பாராத வகையில் ஸ்டூடியோவில், மின்கசிவு காரணமாக தீடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதை பார்த்த அந்த பகுதியில் வசிப்பவர்கள் உடனடியாக கடை உரிமையாளர் மற்றும் ஏற்காடு தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்த தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, தண்ணீரை பீய்ச்சி அடித்து ஸ்டூடியோவுக்குள் பரவிய தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்து காரணமாக சுமார் ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து  சேதமடைந்ததாகவும் கடை உரிமையாளர் சவுந்தரராஜன் ஏற்காடு போலீசில் புகார் செய்தார்.
இந்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Related Tags :
Next Story