அரசு சுவர்களில் சுவரொட்டி ஒட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்-சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்


அரசு சுவர்களில் சுவரொட்டி ஒட்டுபவர்கள் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும்-சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 12 May 2022 2:26 AM IST (Updated: 12 May 2022 2:26 AM IST)
t-max-icont-min-icon

அரசு சுவர்களில் சுவரொட்டி ஒட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

பெரம்பலூர், 
சுவரொட்டிகள்
பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் பொது இடங்களில் குறிப்பாக அரசு சுவர்கள், சாலையின் மைய தடுப்பு சுவர்கள், பாலங்கள், தூண்கள், பஸ் நிலையங்கள், பயணிகள் நிழற்குடை போன்ற இடங்களில் அரசியல் கட்சியினர், தனி நபர்கள் சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருவது வாடிக்கையாகி வருகிறது. 
தியேட்டர் சார்பில் சினிமா காட்சி குறித்த சுவரொட்டியும், அரசியல் கட்சியினரின் வாழ்த்து, பிறந்த நாள் விழா, திருமண விழா, காதணி விழா மற்றும் துக்க காரியத்துக்கும் சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன.
ஊர், தெரு பெயர் பலகையிலும்...
சில இடங்களில் ஊர் பெயர், தெரு பெயர் பலகையிலும், முக்கியமான இடங்களுக்கு செல்லும் வழியை குறிக்கும் வழிகாட்டும் பெயர் பலகையிலும் சுவரொட்டிகளை ஒட்டி விட்டு செல்கின்றனர். இதனால் அந்தப்பகுதிக்கு புதிதாக வருபவர்கள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல முடியாமல் திண்டாடுகின்றனர். தனியாருக்கு சொந்தமான சுவர்களிலும், அனுமதியின்றி சுவரொட்டிகள் ஒட்டப்படு கின்றன. இதனால் சுவரொட்டி ஒட்டப்படும் இடங்கள் அழகு இழந்து காணப்படுவதோடு, மறுநாள் குப்பைக்காடாக காட்சியளிக்கிறது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அரசு சுவர்கள் உள்ளிட்டவைகளில் சுவரொட்டிகளை அகற்றி, அதில் வண்ண ஓவியங்களை வரைய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சுவரொட்டி களை ஒட்டுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Next Story