தனியார் நிதி நிறுவன ஊழியர் கார் மோதி பலி
தனியார் நிதி நிறுவன ஊழியர் கார் மோதி பரிதாபமாக இறந்தார்.
பெரம்பலூர்,
தனியார் நிதி நிறுவன ஊழியர்
திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியப்பட்டி அருகே உள்ள கோவிலூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் செந்தில்குமார் (வயது 28). இவர் திருச்சி மாவட்டம், லால்குடியை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பணம் வசூலிப்பவராக பணிபுரிந்து வந்தார். மேலும் அவர் பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியில் அறை எடுத்து தங்கியிருந்து பணிபுரிந்து வந்தார்.
நேற்று முன்தினம் அதிகாலை செந்தில்குமார் கடலூர் மாவட்டம், தொழுதூர் பகுதியில் பணம் வசூல் செய்ய மோட்டார் சைக்கிளில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சின்னாறு பகுதியில் சென்று கொண்டிருந்தார்.
கார் மோதி பலி
அப்போது அந்த சாலை வழியாக வேகமாக வந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் மோட்டாா் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டதில் படுகாயமடைந்த செந்தில்குமாரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி செந்தில்குமார் நேற்று மதியம் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற கார் டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story