மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சேலத்தில், இலவச தையல் பயிற்சி மையம் எடப்பாடி பழனிசாமி, நாளை தொடங்கி வைக்கிறார்


மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சேலத்தில், இலவச தையல் பயிற்சி மையம் எடப்பாடி பழனிசாமி, நாளை தொடங்கி வைக்கிறார்
x
தினத்தந்தி 12 May 2022 2:51 AM IST (Updated: 12 May 2022 2:51 AM IST)
t-max-icont-min-icon

மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சேலத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா இலவச தையல் பயிற்சி மையத்தை கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நாளை(வெள்ளிக்கிழமை) தொடங்கி வைக்கிறார்.

சேலம், 
அ.தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாசலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இலவச தையல் பயிற்சி மையம்
சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பெயரில்,  இலவச தையல் பயிற்சி மையம் சேலம் 5 ரோடு மெய்யனூர் மெயின்ரோட்டில் மாரியம்மன் கோவில் எதிரில் புதிதாக அமைக்கப்பட்டு உள்ளது. இதன் தொடக்க விழா நாளை(வெள்ளிக்கிழமை) காலை 9 மணியளவில் நடக்கிறது.
விழாவிற்கு சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாசலம் தலைமை தாங்குகிறார். இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு இலவச தையல் பயிற்சி மையத்தை ெதாடங்கி வைக்கிறார்.
மாவட்ட அவைத்தலைவர் வீ.பன்னீர்செல்வம், மாவட்ட பொருளாளர் பங்க் எஸ்.வெங்கடாசலம், மாவட்ட துணை செயலாளர் எஸ்.சவுண்டப்பன், இணை செயலாளர் உமாராஜ், துணை செயலாளர் லட்சுமி, பொதுக்குழு உறுப்பினர்கள் ஜான் கென்னடி, ஏ.கே.ராமச்சந்திரன், சரோஜா ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
வேண்டுகோள்
சிறப்பு விருந்தினர்களாக, கட்சியின் அமைப்பு செயலாளர் செம்மலை, சேலம் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. பாலசுப்பிரமணியன், எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் எம்.கே.செல்வராஜூ, மாவட்ட மாணவரணி செயலாளர் ஏ.பி.சக்திவேல், முன்னாள் எம்.எல்.ஏ. ரவிச்சந்திரன் மற்றும் மாநகர நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.
இந்த விழாவில் கட்சியின் பகுதி செயலாளர்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள் உள்பட கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story