மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த விவசாயி சாவு + "||" + Death

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த விவசாயி சாவு

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த விவசாயி  சாவு
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த விவசாயி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
வேப்பந்தட்டை, 
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பாண்டகப்பாடியை சேர்ந்தவர் கணேசன் (வயது 52), விவசாயி. இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பாண்டகப்பாடியிலிருந்து பெரம்பலூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். வேப்பந்தட்டை சார்பதிவாளர் அலுவலகம் அருகே சென்ற போது எதிர்பாராத விதமாக நாய் ஒன்று குறுக்கே வந்ததால் நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையிலும் பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி கணேசன் நேற்று உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கல்லூரிக்கு செல்லாததை பெற்றோர் கண்டித்ததால் விஷம் குடித்து மாணவர் தற்கொலை
கல்லூரிக்கு செல்லாததை பெற்றோர் கண்டித்ததால் விஷம் குடித்த மாணவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
2. பெண் போலீஸ் ஏட்டு திடீர் சாவு
பெண் போலீஸ் ஏட்டு திடீர் சாவு
3. முன்னாள் ராணுவ வீரர் மர்மச்சாவு
ராஜபாளையம் அருகே முன்னாள் ராணுவ வீரர் மர்மமான முறையில் இறந்தார்.
4. கிணற்றில் மண் சரிந்து விழுந்து தொழிலாளி சாவு
தோகைமலை அருகே கிணற்றில் மண் சரிந்து விழுந்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
5. தொழிலாளி திடீர் சாவு
கடலூரில் முதுநகரில் தொழிலாளி உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.