நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஈரோடு சாலைகளில் வாகன போக்குவரத்து புள்ளி விவரம் சேகரிப்பு


நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஈரோடு சாலைகளில் வாகன போக்குவரத்து புள்ளி விவரம் சேகரிப்பு
x
தினத்தந்தி 12 May 2022 3:02 AM IST (Updated: 12 May 2022 3:02 AM IST)
t-max-icont-min-icon

நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஈரோடு சாலைகளில் வாகன போக்குவரத்து புள்ளி விவரம் சேகரிக்கப்பட்டது.

ஈரோடு
ஈரோடு மாநகரையொட்டி ஈரோடு-பெருந்துறை ரோடு, ஈரோடு -சத்தி ரோடு, ஈரோடு -பவானி ரோடு, ஈரோடு-பள்ளிபாளையம் ரோடு, ஈரோடு சென்னிமலை ரோடு, ஈரோடு -பூந்துறை ரோடு, ஈரோடு -மூலனூர் ரோடு, ஈரோடு -கரூர் ரோடு ஆகிய ரோடுகள் உள்ளன. இவை அனைத்தும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை ரோடாகும். இந்த ரோடுகளில் மேற்கொள்ள வேண்டிய சாலை விரிவாக்கம் தொடர்பாக அதிகாரிகள் ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார்கள்.
கடந்த 9-ந் தேதி முதல் 7 நாட்களுக்கு இந்த பணி நடைபெறுகிறது. இதற்காக நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் சாலைகளின் ஓரத்தில் உட்கார்ந்து வாகன போக்குவரத்து புள்ளிவிவரங்கள் சேகரித்தனர்.
இதுகுறித்து தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான ரோடுகளில் வாகன போக்குவரத்து குறித்த புள்ளி விவரங்கள் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை சேகரிக்கப்படும். அதன்படி ஈரோட்டில் உள்ள நெடுஞ்சாலைத்துறை சாலைகளில் புள்ளி விவர சேகரிப்பு பணி தொடங்கி நடந்து வருகிறது.
7 நாட்கள் புள்ளி விவர சேகரிப்புக்கு பின்னர், ஆய்வு முடிவுகள் அனைத்தும் சராசரி அடிப்படையில் சரிசெய்யப்பட்டு ஆய்வு அறிக்கை உயர் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்படும். இந்த அடிப்படையில்தான் வரும் காலங்களில் சாலை விரிவாக்கம் உள்ளிட்ட பணிகள் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story