தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 11 May 2022 9:36 PM GMT (Updated: 2022-05-12T03:06:32+05:30)

தினத்தந்தி புகார் பெட்டி

சேதமடைந்த மின்கம்பம்
கொல்லங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட 20-வது வார்டு மஞ்சத்தோப்பு பகுதியில் மின்கம்பம் அமைந்துள்ளது. இந்த கம்பத்தின் அடிப்பகுதி சேதமடைந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த மின்கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். 
    -கி.சந்தோஷ்குமார், 
அம்பலக்குளம்.
சேதமடைந்த சாலை
கீழ்குளம் பாஞ்சாயத்துக்குட்பட்ட அம்சியில் இருந்து  விழுந்தயம்பலம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் கல்லுநாட்டி பகுதியில் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உயிரிழப்பு ஏற்படுவதற்கு முன் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                 -பால்ராஜ், அரசகுளம். 
விபத்து அபாயம்
கொட்டாரம் அருகே வைகுண்டப்பதியில் மருந்துவாழ்மலை செல்லும் சாலையோரம் ஒரு மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பம் சேதமடைந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்த வண்ணம் காணப்படுகிறது. இதனால், எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த மின்கம்பத்தை மாற்றி விட்டு புதிய கம்பத்தை நடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். 
                                -பால்துரை, வைகுண்டப்பதி.
சாலை சீரமைக்கப்படுமா?
ஆடராவிளை சந்திப்பில் இருந்து மேல்ஆடராவிளை சட்டுவம்தோப்பு வழியாக எள்ளுவிளைக்கு  செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகிறார்கள். மேலும் விபத்திலும் சிக்கி வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா? 
                               -முத்துக்குமார், ஆடராவிளை.
பஸ்சை இயக்க வேண்டும்
புதுக்கடையில் இருந்து சடையன்குழி, கிள்ளியூர், மாங்கரை, பாலூர், கருங்கல், கருக்குப்பனை, மத்திகோடு, திக்கணங்கோடு, திங்கள்நகர் வழியாக தக்கலைக்கு 10 ‘சி’ என்ற பஸ் இயக்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த சில மாதங்களாக இந்த பஸ் புதுக்கடையில் இருந்து கருங்கல் வரை மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இயக்கப்படாத வழிதடத்தில் பஸ்சை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                        -எட்வின், மத்திகோடு.
சுகாதார சீர்கேடு
மணவாளக்குறிச்சி பேரூராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படுகின்ற குப்பைகள் கடியப்பட்டணம்-சின்னவிளைக்கு இடைப்பட்ட பகுதியில் கடற்கரையோரம் கொட்டப்பட்டு தீவைத்து எரிக்கப்படுகிறது. இதனால், அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, சேகரிக்கப்படும் குப்பைகளை மாற்று இடத்தில் கொட்டி சுகாதார சீர்கேட்டை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.                                                                     
-பெனடிக்ட், கடியப்பட்டணம்.  
-**

Next Story