பெங்களூருவில் வழிபாட்டு தலங்களில் ஒலிபெருக்கிகளை அகற்றாவிட்டால் கடும் நடவடிக்கை; போலீஸ் கமிஷனர் கமல்பந்த் எச்சரிக்கை


பெங்களூருவில் வழிபாட்டு தலங்களில் ஒலிபெருக்கிகளை அகற்றாவிட்டால் கடும் நடவடிக்கை; போலீஸ் கமிஷனர் கமல்பந்த் எச்சரிக்கை
x
தினத்தந்தி 11 May 2022 9:42 PM GMT (Updated: 11 May 2022 9:42 PM GMT)

பெங்களூருவில் வழிபாட்டு தலங்களில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள ஒலி பெருக்கிகளை அகற்றாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் கமல்பந்த் எச்சரித்துள்ளார்.

பெங்களூரு:

பெங்களூரு போலீஸ் கமிஷனர் கமல்பந்த் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேடடியின் போது கூறியதாவது:-

இரவு 10 மணிக்கு மேல்...

  பெங்களூருவில் வழிபாட்டு தலங்களில் ஒலி பெருக்கிகளை பயன்படுத்துவது குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்து அரசு முடிவுக்கு வந்துள்ளது. ஒலிபெருக்கி பயன்பாடு குறித்து வழிபாட்டு தலங்களுக்கு தனியாக வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசு வெளியிட்டுள்ளது. எனவே அரசு மற்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை வழிபாட்டு தலங்களில் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

  பெங்களூருவில் இரவு 10 மணிக்கு மேல் காலை 6 மணிவரை அதிக சத்தங்களை எழுப்பும் ஒலிபெருக்கிகளை பயன்படுத்துவதற்கு அனுமதி இல்லை. இந்த நேரத்தில் ஒலிபெருக்கிகளை பயன்படுத்தினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். வழிபாட்டு தலங்களில் ஒலி பெருக்கி பயன்படுத்தும் விவகாரத்தில் போலீசாருக்கு எந்த விதமான குழப்பமும் இல்லை.

சட்டப்படி கடும் நடவடிக்கை

  பெங்களூருவில் வழிபாட்டு தலங்களில் முறையான அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டுள்ள ஒலிபெருக்கிகளை 15 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக தான் 15 நாட்கள் காலஅவகாசமும் வழங்கப்பட்டு இருக்கிறது. அதனால் பெங்களூருவில் முறையான அனுமதி இல்லாமல் வழிபாட்டு தலங்களில் இருக்கும் ஒலி பெருக்கிகளை அகற்ற வேண்டும். அவ்வாறு அகற்றாவிட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுப்பது உறுதி.

  வழிபாட்டுகளில் அனுமதி இல்லாமல் ஒலி பெருக்கி வைத்திருந்தால், இன்னும் 15 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களில் அனுமதி பெற்றுக் கொள்ளலாம். எந்தெந்த பகுதிகளில் எந்த அளவுக்கு ஒலிபெருக்கிகள் சத்தம் எழுப்ப வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளதோ, அதன்படி வழிபாட்டு தலங்கள் நடந்து கொள்ள வேண்டும். அரசு மற்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுகளை வழிபாட்டு தலங்கள் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறனே்.
  இவ்வாறு கமல்பந்த் கூறினார்.

Next Story