கோபி அனைத்து மகளிர் போலீசில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்


கோபி அனைத்து மகளிர் போலீசில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்
x
தினத்தந்தி 12 May 2022 3:17 AM IST (Updated: 12 May 2022 3:17 AM IST)
t-max-icont-min-icon

கோபி அனைத்து மகளிர் போலீசில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்.

கடத்தூர்
கோபி அனைத்து மகளிர் போலீசில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர். 
காதல் ஜோடி
கோபி அருகே உள்ள ஓலப்பாளையத்தை சேர்ந்தவர் பிரகாசம். இவருடைய மகன் பிரபு (வயது 25). இவர் பி.பார்ம்    படித்து முடித்துவிட்டு, திருப்பூரில் மருந்துகடை வைத்து நடத்தி வருகிறார். 
பிரபு படித்த அதே கல்லூரியில் திருப்பூர் காந்திநகரை சேர்ந்த அசோகன் என்பவருடைய மகள் விஷ்ணுபிரியா (25) என்பவரும் படித்தார். அப்போது அவர்களுக்கிடையே காதல் மலர்ந்தது. இவர்களுடைய காதலுக்கு இருதரப்பு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. 
இந்தநிலையில் நேற்று முன்தினம் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி ஈரோட்டில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்துகொண்டார்கள். 
தஞ்சம்
இதைத்தொடர்ந்து காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு கோபி அனைத்து மகளிர் போலீசில் தஞ்சம் அடைந்தது. இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மேனகா இருதரப்பு பெற்றோரையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.  இதில் விஷ்ணுபிரியாவின் பெற்றோர் காதல் ஜோடியை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் பிரபுவின் பெற்றோருடன் காதல் ஜோடியை போலீசார் அனுப்பி வைத்தனர்.

Next Story