மாவட்ட செய்திகள்

சேலத்தில்156 தூய்மை பணியாளர்களுக்கு கண் கண்ணாடிமேயர் ராமச்சந்திரன் வழங்கினார் + "||" + Eyeglasses for 156 cleaning staff

சேலத்தில்156 தூய்மை பணியாளர்களுக்கு கண் கண்ணாடிமேயர் ராமச்சந்திரன் வழங்கினார்

சேலத்தில்156 தூய்மை பணியாளர்களுக்கு கண் கண்ணாடிமேயர் ராமச்சந்திரன் வழங்கினார்
சேலத்தில் 156 தூய்மை பணியாளர்களுக்கு கண் கண்ணாடியை மேயர் ராமச்சந்திரன் வழங்கினார்.
சேலம்,
சேலம் மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கான மருத்துவ முகாம் தொங்கும் பூங்கா பல்நோக்கு அரங்கில் நடைபெற்றது. இம்முகாமில் 1,936 பணியாளர்கள் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர். முகாமில் உயர் ரத்த அழுத்தம், நீரழிவு நோய், உடல் பருமன் குறைப்பதற்கான சிகிச்சையும், ரத்த பரிசோதனை, தேவைப்படும் நபர்களுக்கு இருதய ஸ்கேன் பரிசோதனையும் செய்யப்பட்டது.
மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நபர்களில் மேல் சிகிச்சை தேவைப்படும் தூய்மைப்பணியாளர்களுக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உயர் சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டது. நிரந்தர தூய்மைப்பணியாளர்களுக்கு அரசு ஊழியர் மருத்துவ காப்பீட்டு திட்டத்திலும், சுய உதவிக்குழு மூலம் பணிபுரியும் பணியாளர்களுக்கு தமிழக முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்திலும் தொடர் மருத்துவ சிகிச்சை கிடைத்திட பயனாளிகள் அட்டை பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மருத்துவ முகாமில் பார்வை குறைபாடு, கண்புரை ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்து கண் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 156 தூய்மை பணியாளர்களுக்கு கண் பார்வை குறைபாடு உள்ளதாக கண்டறியப்பட்டு அவர்களுக்கு கண் கண்ணாடிகளை நேற்று மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் வழங்கினார். நிகழ்ச்சியில் ஆணையாளர் கிறிஸ்துராஜ், மாநகர நல அலுவலர் யோகானந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.
-----------------