மாரியம்மன் கோவில் தேரோட்டம்


மாரியம்மன் கோவில் தேரோட்டம்
x
தினத்தந்தி 12 May 2022 3:40 AM IST (Updated: 12 May 2022 3:40 AM IST)
t-max-icont-min-icon

நாமகிரிப்பேட்டையில் மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது.

நாமகிரிப்பேட்டை:
நாமகிரிப்பேட்டை நகர் பகுதியில் மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா நடந்து வருகிறது. பூச்சாட்டு கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கிய விழா பால், சந்தன காப்பு அபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து விரதம் இருந்த பக்தர்கள் தீ மிதிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் தங்களது குழந்தைகளுடன் குண்டம் இறங்கி தீ மிதித்தனர். பின்னர் நடந்த அன்னதானத்தை பேரூராட்சி துணைத்தலைவர் அன்பழகன் தொடங்கி வைத்தார்.
மாலையில் தேரோட்டம் நடந்தது. முன்னாள் எம்.பி. சுந்தரம், பொன்னுசாமி எம்.எல்.ஏ. துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், முத்தாயம்மாள் கலை கல்லூரி செயலாளர் ராமசாமி உள்பட பலர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக வந்து நிலையை அடைந்தது.

Next Story