மாரியம்மன் ேகாவில் திருவிழா
பரமத்திவேலூரில் மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது.
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் தாலுகா ஜேர்பாளையம் அருகே ஆனங்கூர் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு கடந்த 3-ந் தேதி பூச்சாட்டல் மற்றும் கம்பம் நடும் விழா நடந்தது. தொடர்ந்து தினமும் கோவில் பூசாரி தீச்சட்டி ஏந்தி கோவிலை வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. 9-ந் தேதி வடிசோறு நிகழ்ச்சியும், நேற்று காலை பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி பால்குடங்களுடன் ஊர்வலமாக புறப்பட்டு கோவிலை வந்தடைந்தனர். தொடர்ந்து செல்லாண்டியம்மன் மற்றும் மாரியம்மனுக்கு பால் அபிஷேகம் நடந்தது. மாலையில் பொங்கல், மாவிளக்கு பூஜையும், வாணவேடிக்கையும் நடந்தது. இன்று (வியாழக்கிழமை) கிடா வெட்டுதல் நிகழ்ச்சியும், மாலையில் அம்மன் வீதி உலா நிகழ்ச்சியும், மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடக்கிறது.
Related Tags :
Next Story