ஓய்வு பெற்ற ஆசிரியர் விபத்தில் சாவு


ஓய்வு பெற்ற ஆசிரியர் விபத்தில் சாவு
x
தினத்தந்தி 12 May 2022 4:28 AM IST (Updated: 12 May 2022 4:28 AM IST)
t-max-icont-min-icon

ஓய்வு பெற்ற ஆசிரியர் விபத்தில் இறந்தார்.

ஈத்தாமொழி:
நாகர்கோவிலை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் விபத்தில இறந்தார்.
நாகர்கோவில் கணேசபுரம் கிழக்குத் தெருவை சேர்ந்தவர் எட்வின் சேவியர் (வயது 77), ஓய்வுபெற்ற ஆசிரியர். இவரும் புதுக்குடியிருப்பை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் வாஷிங்டதாஸ் (75) என்பவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் பெரிய காட்டுக்கு சென்று விட்டு நாகர்கோவிலுக்கு திரும்பிக்கொண்டு இருந்தனர். மோட்டார் சைக்கிளை எட்வின் சேவியர் ஓட்டினார்.
 சுண்டபற்றி விளை அருகே வரும்போது, முன்னால் சென்ற மினி லாரி டிரைவர் திடீரென பிரேக் போட்டதாக தெரிகிறது. இதனால் மினி லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் எட்வின் சேவியர் உள்பட 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த எட்வின் சேவியர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். வாஷிங்டதாஸ் காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் ஈத்தாமொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story