சமூக வலைதளங்களின் மூலம் பேசும் முன்பின் தெரியாதவர்களை நம்பி பணம் அனுப்ப கூடாது - பொதுமக்களுக்கு, கமிஷனர் வேண்டுகோள்


சமூக வலைதளங்களின் மூலம் பேசும் முன்பின் தெரியாதவர்களை நம்பி பணம் அனுப்ப கூடாது - பொதுமக்களுக்கு, கமிஷனர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 12 May 2022 10:48 AM IST (Updated: 12 May 2022 10:48 AM IST)
t-max-icont-min-icon

சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை,  

ஆண்களோ, பெண்களோ, நிறுவனம் சார்பில் வெளிநாட்டவர் போல சமூக வலைதளங்களிலும், இ-மெயிலிலும் தொடர்புகொண்டு பேசுவோரிடம் பொதுமக்கள் கவனமாக இருக்கவேண்டும். வர்த்தகமோ, திருமணமோ தகுந்த நபர்களின் மூலம் விசாரித்து அறியவேண்டும்.

செல்போனில் பேசுகையில் சம்பந்தப்பட்ட அந்த வெளிநாட்டவர் பணம் அனுப்ப சொல்லி கேட்டால் உடனடியாக அந்த அழைப்பை துண்டித்து விட வேண்டும். பணம் எதுவும் அனுப்பக்கூடாது. அந்த பணம் திருப்பி கிடைக்க வேண்டும் என்பதற்காக மீண்டும் மீண்டும் பணம் அனுப்பவும் கூடாது. நீங்கள் அனுப்பும் பணத்தை அந்த நபர்கள் திருப்பி தரப்போவது கிடையாது.

எனவே முன்பின் தெரியாமல் பேஸ்புக், வாட்ஸ்-அப், டெலிகிராமில் பேசுவோரை நம்பி பணம் அனுப்ப கூடாது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story