சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து பணிமனைக்கு சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டதால் பரபரப்பு
சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து பணிமனைக்கு சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டதால் பரபரப்பு நிலவியது.
சென்னை,
மங்களூரில் இருந்து சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல் வரை இயக்கப்படும் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 22637) நேற்று காலை சென்டிரல் ரெயில் நிலையத்தில் 3-ம் நடைமேடைக்கு வந்தது. இந்த ரெயில் பயணிகளை இறக்கிவிட்டு பணிமனை நோக்கி சென்ற போது எதிர்பாராதவிதமாக தடம் புரண்டது.
இதில் என்ஜின் அருகே இருந்த 2 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கின. ரெயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரிய அளவில் அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை. இதையடுத்து உடனடியாக ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டன.
தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த ரெயில்வே அதிகாரிகள், தடம் புரண்ட ரெயில் பெட்டிகளை தண்டவாளத்தில் ஏற்றி மீண்டும் இயக்கினர். அதைத்தொடர்ந்து ரெயில் பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. ரெயில் தடம் புரண்டதால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது.
Related Tags :
Next Story