திருவள்ளூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை திருட்டு


திருவள்ளூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை திருட்டு
x
தினத்தந்தி 12 May 2022 1:43 PM IST (Updated: 12 May 2022 1:43 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

திருவள்ளூர், 

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் பண்ணூர் சூசையப்பர் தெருவை சேர்ந்தவர் பிரபு (வயது 30). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி சத்தியபிரியா (25). இந்த நிலையில் கடந்த 7-ந்தேதியன்று கணவன், மனைவி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய சென்றனர். நேற்று முன்தினம் காலை அவர்களது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. 

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக போன் செய்து சத்தியபிரியாவுக்கு தகவல் தெரிவித்தனர். இதை தொடர்ந்து அவர்கள் தங்கள் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதையும், படுக்கை அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த கம்மல், மூக்குத்தி, வளையல், தங்கச்சங்கிலி என 5 பவுன் தங்க நகைகளும், ஒரு கிலோ வெள்ளி பொருட்களையும் திருடி சென்றது தெரியவந்தது. 

இது குறித்து சத்தியபிரியா மப்பேடு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின், சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ ஆகியோர் வழக்குப்பதிவு செய்து இது சம்பந்தமாக விசாரித்து வருகிறார்கள். மேலும் கொள்ளை நடந்த வீட்டில் கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்து சென்றனர். மோப்ப நாய் மோப்பம் பிடித்தவாறு ஓடிச்சென்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

Next Story