கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவள்ளூர்,
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் எதிரே நேற்று மாலை திருவள்ளூர் மாவட்ட தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கம் சார்பில் 3 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் எஸ்.பிரபாகரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சுகுமார், மாவட்ட பொருளாளர் லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கத்தின் மாநில தலைமை நிலைய செயலாளர் முத்துகுமார், மாநில துணை தலைவர் சந்தோஷ் மேரி ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள்.
இதில் 100-க்கும் மேற்பட்ட அரசு பணியாளர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், 3 சதவீத அகவிலைப்படியை ஜனவரி 2022 முதல் உடனடியாக வழங்க வேண்டும், ஈட்டிய விடுப்பை ஒப்படைத்து பணமாக பெறும் முறையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் போன்ற 3 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
Related Tags :
Next Story