கும்மிடிப்பூண்டியில் கழிவுநீர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்


கும்மிடிப்பூண்டியில் கழிவுநீர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்
x
தினத்தந்தி 12 May 2022 3:04 PM IST (Updated: 12 May 2022 3:04 PM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டியில் கழிவுநீர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் இல்லாத காரணத்தால் இங்கிருந்து அகற்றப்படும் கழிவு நீரானது பூந்தமல்லி அருகே உள்ள திருமழிசைக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இதனால் லாரி உரிமையாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் அதிக செலவு ஏற்படுவதால் கும்மிடிப்பூண்டி பகுதியிலேயே கழிவு நீர் சுத்தகரிப்பு நிலையம் ஏற்படுத்தி தர வலியுறுத்தி கழிவுநீர் டேங்கர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். தங்களது டேங்கர் லாரிகளை வேற்காடு அருகே சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சர்வீஸ் சாலையில் நிறுத்தி வைத்து உள்ளனர். கழிவுநீர் அகற்றும் டேங்கர் லாரிகளின் வேலை நிறுத்தத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Next Story