பொன்னேரி அருகே வீட்டுக்குள் புகுந்து நகை, பணம் திருட்டு - முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை


பொன்னேரி அருகே வீட்டுக்குள் புகுந்து நகை, பணம் திருட்டு - முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை
x
தினத்தந்தி 12 May 2022 4:01 PM IST (Updated: 12 May 2022 4:01 PM IST)
t-max-icont-min-icon

பொன்னேரி அருகே முகமூடி கொள்ளையர்கள் வீட்டுக்குள் புகுந்து நகை, பணத்தை திருடி சென்றனர்.

பொன்னேரி,

மீஞ்சூர் அருகே உத்தண்டிகண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் சுமதி (வயது 55). இவருக்கு சாமி (25), முனுசாமி (20) என 2 மகன்கள் உள்ளனர். சுமதியின் தாய் ஜெயம்மாள் (75) இவர்களுடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் சாமியின் மனைவி பிரசவத்திற்காக கும்மிடிப்பூண்டி அருகே உள்ள சுண்ணாம்புகுளம் கிராமத்திற்கு சென்று விட்டார். மனைவியை பார்ப்பதற்காக சாமி சென்றுவிட்டார்.

நேற்று முன்தினம் இரவு வீட்டில் சுமதி, இளையமகன் முனுசாமி, தாய் ஜெயம்மாள் ஆகிேயார் மட்டும் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர். இரவு வெளியே செல்ல கதவை திறந்த ஜெயம்மாள் பூட்டாமல் தூங்கி விட்டார்.

நள்ளிரவு நேரத்தில் தன்னுடைய நகையை யாரோ பறிப்பது போன்று உணர்ந்த சுமதி தூக்கத்தில் இருந்து எழுந் தார். அப்போது முகமூடி அணிந்த மர்ம நபர்கள் அவர் அணிந்திருந்த முழுமையாக ஒரு தங்கச்சங்கிலி, ஒரு தங்கச்சங்கிலியில் பகுதி என்று பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர். முன்னதாக கொள்ளையர்கள் பீரோவில் இருந்த ரூ.1 லட்சத்து 14 ஆயிரம் மற்றும் தங்க நகையை திருடி உள்ளனர். மொத்தம் 9 பவுன் நகையை திருடி உள்ளனர்.

இது குறித்து மீஞ்சூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்பு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்த நிலையில் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் பதிவு செய்தனர்.

Next Story