தொங்கும்மின்சார வயர்


தொங்கும்மின்சார வயர்
x
தினத்தந்தி 12 May 2022 4:03 PM IST (Updated: 12 May 2022 4:03 PM IST)
t-max-icont-min-icon

தொங்கும்மின்சார வயர்

தொங்கும்மின்சார வயர் 
திருப்பூர்-தாராபுரம் ரோட்டில் கோவில் வழி பஸ் நிறுத்தம் ஆதி திராவிடர் பள்ளி அருகில் மின்சார வயர் தொங்கி கொண்டுள்ளது. இது குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் தகவல் ெதரிவித்தும், மின்வயர் சரி செய்யப்படவில்லை. கனரக  வாகனங்கள் அந்த வழியாக போகும் போது உரச வாய்ப்பு உள்ளது. அப்படி உரசினால் அசம்பாவிதம் ஏற்படும். எனவே அதற்கு முன்பு மின்வயரை சரி செய்ய வேண்டும். 
குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில் பாளையகாடு பகுதியில்  குடிநீர் குழா் உடைந்து ரோட்டில் பல நாட்களாக குடிநீர் வீணாக சென்று கொண்டிருக்கிறது. இதனால் தினமும் பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணாகிறது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளைத்தில் இருந்து குழாய் பதித்து பணம் செலவு செய்து ெகாண்டு வரப்படும் குடிநீ் இப்படி வீணாகலாமா? எனவே தரமான குழாய்களை பதித்து மீண்டும் குழாய் உடையாத வண்ணம் பார்ப்பது அதிகாரிகளுக்கும், மக்களுக்கும் நல்லதுதானே! அதிகாரிகள் முயற்சி செய்வார்களா

Next Story