வாகன உரிமையாருக்கு ரூ10ஆயிரம் அபராதம்
வாகன உரிமையாருக்கு ரூ10ஆயிரம் அபராதம்
உடுமலை
உடுமலையை அடுத்து சின்னவீரம்பட்டி ஊராட்சி இந்திராநகரில் உள்ள குட்டையில் பகல், இரவு நேரங்களில் வாகனங்களில் குப்பைகள் கொண்டு வந்து கொட்டப்பட்டு வருகின்றன.அதனால் சுற்றுச்சூழல், சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. இந்த நிலையில் அந்த குட்டையில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்கும்வகையில் அந்த பகுதியை சேர்ந்த வார்டு கவுன்சிலர் தட்சிணாமூர்த்தி உள்ளிட்டபொதுமக்கள் சிலர் சிறிதுதூரத்தில் இருந்துகண்காணித்து வந்தனர்.அப்போது ஒரு சரக்கு வாகனம் அங்கு குட்டைபகுதிக்கு வந்து நின்றது.அந்த வாகனத்தில் வந்தவர்கள், வாகனத்தில் இருந்த பொருட்களை எடுத்து குட்டைபகுதியில் போட்டுக்கொண்டிருந்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற பொதுமக்கள், அந்த வாகனத்தை சிறைபிடித்து ஊராட்சி நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர்.தகவல் கிடைத்ததும் சின்னவீரம்பட்டி ஊராட்சி தலைவர் பி.கலாவதி பழனிச்சாமி, துணைத்தலைவர்
எம்.வீராத்தாள், ஊராட்சி செயலாளர் எஸ்.மாரிமுத்து, வாளவாடி சுகாதார ஆய்வாளர் சதாசிவம்ஆகியோர் அங்கு விரைந்து வந்தனர்.அப்போது அந்த பொருட்களை ஆய்வு செய்ததில் அவை காலாவதியான மளிகைபொருட்கள் மற்றும் சோப்புகள் என்பது தெரியவந்தது. இதையொட்டி குப்பைகளை குட்டையில் கொட்ட வந்த வாகன உரிமையாளருக்கு, ஊராட்சி நிர்வாகம், ரூ.10ஆயிரம் அபராதம் விதித்தது.அத்துடன் காலாவதியான அந்த மளிகைப்பொருட்கள் அந்த வாகனத்திலேயே ஏற்றி திருப்பி அனுப்பப்பட்டன.
Related Tags :
Next Story