கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி சிறுவன் பலி


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 12 May 2022 4:13 PM IST (Updated: 12 May 2022 4:13 PM IST)
t-max-icont-min-icon

பால்கர் மாவட்டம் தகானு ஆகார் கடலில் குளித்தபோது சிறுவன் ராட்சத அலையில் சிக்கி பலியானான்.

வசாய், 
  பால்கர் மாவட்டம் தகானு நர்பாட் பகுதியை சேர்ந்த சிறுவன் கிஷோர் மாத்ரே (வயது 13). 7-ம் வகுப்பு படித்து வந்த இவன் கோடை விடுமுறை காரணமாக தனது பாட்டி வீட்டிற்கு வந்திருந்தான். 
கடற்கரைக்கு சென்றபோது அங்கிருந்த அவரது நண்பர்கள் கடலில் இறங்கி குளித்து கொண்டிருந்ததை கண்டான். இதனால் கிஷோரும் கடலில் இறங்கி குளித்தான். அப்போது ராட்சத அலை அவனை வாரி சுருட்டி உள்ளே இழுத்து சென்றது. இதைப்பார்த்து அதிர்சியடைந்த உடன் இருந்த நண்பர்கள், கரைக்கு தப்பி வந்தனர். ஆனால் அவர்கள் கிஷோர் மாத்ரேவின் பெற்றோருக்கு இதுகுறித்து தெரியபடுத்தாமல் இருந்து விட்டனர்.
  இரவு வரையில் சிறுவன் கிஷோர் மாத்ரே வீடு திரும்பாததால், பல இடங்களில் பெற்றோர் தேடி பார்த்தனர். எங்கும் கிடைக்காததால் போலீசில் புகார் அளித்தனர்.
  இதற்கிடையில் நேற்று தகானு ஆகார் கடற்கரையில் சிறுவன் கிஷோர் மாத்ரேவின் உடல் ஒதுங்கியது. தகானு போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story