திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் உலக செவிலியர் தின விழா
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் உலக செவிலியர் தின விழா நடந்தது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில், ஒருங்கிணைந்த மகப்பேறு மற்றும் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு கட்டிடத்தில் உள்ள கூட்ட அரங்கில் உலக செவிலியர் தின விழா கொண்டாடப்பட்டது. இதற்கு தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்க மாநில துணை தலைவர் அமுதா தலைமை தாங்கினார். அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் விஜயகுமார், கண்காணிப்பாளர் வீரமணி, நிலைய மருத்துவ அதிகாரி சந்தானகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் கலந்துகொண்ட செவிலியர்கள் கேக் வெட்டி சக செவிலியர்களுக்கு வழங்கி மகிழ்ச்சியுடன் விழாவை கொண்டாடினர். மேலும் கலைநிகழ்ச்சிகளும் நடந்தது. அதையடுத்து செவிலியர்கள் அனைவரும் மெழுகுவர்த்தி ஏந்தி உலக செவிலியர் தின உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
Related Tags :
Next Story