ஜவுளிக்கடை உரிமையாளர் மனைவியிடம் தங்க சங்கிலி பறிப்பு


ஜவுளிக்கடை உரிமையாளர் மனைவியிடம்   தங்க சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 12 May 2022 5:25 PM IST (Updated: 12 May 2022 5:25 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் ஜவுளிக்கடை உரிமையாளர் மனைவியிடம் 7¼ பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் ஜவுளிக்கடை உரிமையாளர் மனைவியிடம் 7¼ பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
இந்த துணிகர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
ஜவுளிக்கடை
தூத்துக்குடி ஸ்டேட் வங்கி காலனி குமரன் நகரை சேர்ந்தவர் போஸ்கோ ராஜா. இவர் தூத்துக்குடி வி.இ. ரோட்டில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி சகாய சித்ரா (வயது 52).
இவர் நேற்று முன்தினம் இரவு ஜவுளிக்கடைக்கு சென்று உள்ளார். பின்னர் அங்கிருந்து தனது மகளுடன் மீண்டும் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். அவர் ஸ்டேட் வங்கி காலனி ரோட்டில் சென்று கொண்டு இருந்தார்.
7¼ பவுன்
அப்போது அங்கு ஒரு விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளில் மர்ம ஆசாமிகள் 2 பேர் வந்தனர். அவர்கள் திடீரென சகாயசித்ரா கழுத்தில் அணிந்திருந்த சுமார் ரூ.2 லட்சம் மதிப்புள்ள 7¼ பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டார்களாம். இதனால் அதிர்ச்சி அடைந்த சகாய சித்ரா சத்தம் போட்டு உள்ளார். ஆனால் மர்ம நபர்கள் அங்கிருந்து வேகமாக சென்று விட்டனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி வடபாகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
------------

Next Story