கடனை திருப்பி கேட்டவரை கொலை செய்ய முயற்சி


கடனை  திருப்பி கேட்டவரை கொலை செய்ய முயற்சி
x
தினத்தந்தி 12 May 2022 5:53 PM IST (Updated: 12 May 2022 5:53 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அருகே கடனை திருப்பி கேட்டவரை அரிவாளால் வெட்டி கொல்ல முயற்சி நடந்துள்ளது.

தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே உள்ள பொட்டல்காட்டை சேர்ந்தவர் கோட்டை (வயது 47). இவர் அதே பகுதியை சேர்ந்த ஈனமுத்து (59) என்பவரிடம் ஒரு வருடத்துக்கு முன்பு ரூ.2 ஆயிரம் கடனாக வாங்கினார். அதனை கோட்டை திருப்பி கொடுக்காமல் இருந்தாராம். நேற்று முன்தினம் கோட்டை குலையன்கரிசல்-விநாயகபுரம் ரோடு பகுதியில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த ஈனமுத்து பணத்தை திருப்பி கேட்டார். இதில் ஆத்திரம் அடைந்த கோட்டை, ஈனமுத்துவை அவதூறாக பேசி அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றாராம்.
இதுகுறித்து ஈனமுத்து அளித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கோட்டையை கைது செய்தார். இவர் மீது ஏற்கனவே 4 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story