நிலஅளவை குறித்து கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பயிற்சி


நிலஅளவை குறித்து கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பயிற்சி
x
தினத்தந்தி 12 May 2022 5:55 PM IST (Updated: 12 May 2022 5:55 PM IST)
t-max-icont-min-icon

நிலஅளவை குறித்து கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

பழனி:
தமிழகத்தில் நிலஅளவை பணிகளை துரிதப்படுத்தும் வகையில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு நிலஅளவை குறித்து பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி பழனி தாலுகாவில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்களுக்கு நில அளவை குறித்த செயல்விளக்க பயிற்சி பழனியை அடுத்த சிவகிரிப்பட்டியில் இன்று நடைபெற்றது. நிலஅளவை ஆய்வாளர் சிவகுருநாதன் தலைமையில், துணை ஆய்வாளர் பெரியநாயகி பயிற்சி அளித்தார். அப்போது நிலஅளவை முறை, அளவீடு, சப்-டிவிசன் குறித்து பயிற்சி அளித்தார். பின்னர் பழனி தாலுகா அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்துகொண்டனர். 
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், 18-ந்தேதி வரை நில அளவீடு முறை குறித்து விரிவாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அதைத்தொடர்ந்து நிலஅளவீடு பணிகளை கிராம நிர்வாக அலுவலர்கள் மேற்கொள்வர். இதன்மூலம் நிலஅளவீடு பணிகள் துரிதமாக நடைபெறும் என்றனர்.

Next Story