ஊர்க்காவல் படையில் வட்டார தளபதி பதவிக்கு விண்ணப்பிக்கலாம்-தென்காசி போலீஸ் சூப்பிரண்டு தகவல்


ஊர்க்காவல் படையில் வட்டார தளபதி பதவிக்கு விண்ணப்பிக்கலாம்-தென்காசி போலீஸ் சூப்பிரண்டு தகவல்
x
தினத்தந்தி 12 May 2022 6:01 PM IST (Updated: 12 May 2022 6:01 PM IST)
t-max-icont-min-icon

ஊர்க்காவல் படையில் வட்டார தளபதி பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தென்காசி போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் தெரிவித்து உள்ளார்.

தென்காசி:

தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:- 
தென்காசி மாவட்ட ஊர்க்காவல் படை பிரிவில் காலியாக உள்ள வட்டார தளபதி மற்றும் துணை வட்டார தளபதி பதவிகளுக்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 

பட்டப்படிப்பு அல்லது அதற்கு மேல் படித்தவர்களாக இருக்க வேண்டும். 21 வயது முதல் 50 வயதுக்குள் இருத்தல் வேண்டும். இது ஒரு கவுரவப்பதவி என்பதால் ஊதியம் ஏதும் வழங்கப்படமாட்டாது. தேசிய மாணவர் படையில் பயிற்சி பெற்ற விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், டாக்டர்கள் போன்ற உயர் பதவி வகிப்பவர்கள் வட்டார தளபதி பதவியில் சேர்ந்து தொண்டு செய்ய விருப்பம் மற்றும் சேவை மனப்பான்மை உடைய ஆண் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்களது விண்ணப்பத்தை சுயவிவர குறிப்புடன் காவல் கண்காணிப்பாளர், தென்காசி மாவட்டம் என்ற முகவரிக்கு வருகிற 20-ந் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story