மஞ்சள் பயிரில் வேர் தண்டு அழுகல் நோய்


மஞ்சள் பயிரில் வேர் தண்டு அழுகல் நோய்
x
தினத்தந்தி 12 May 2022 6:01 PM IST (Updated: 12 May 2022 6:01 PM IST)
t-max-icont-min-icon

மஞ்சள் பயிரில் வேர் தண்டு அழுகல் நோய்

பொங்கலூர், 
பொங்கலூர் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மஞ்சள் பயிரில் வேர் தண்டு அழுகல் நோய் காணப்படுவதாகவும், அதனை தடுக்கும் முறைகள் குறித்தும் பொங்கலூர் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜலிங்கம் கூறியதாவது:- 
தற்போது பொங்கலூர் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மஞ்சள் பயிரில் வேர் தண்டு அழுகல் நோய் காணப்படுகிறது. இது பாதிக்கப்பட்டுள்ள தாவரத்தின் அடித்தண்டு பகுதியில் நீர் கசிந்து மென்மையாக காணப்படும். வேர் அமைப்பு பெருமளவில் குறைந்து காணப்படும்.
இலையின் ஓரத்திலிருந்து சிறிது சிறிதாக காயத்தொடங்கும். பாதிக்கப்பட்ட வேர்த்தண்டு, மென்மையாக மாறி பின் அழுகி, பல நிறங்களில் காணப்படும். இதனை தடுக்கநோய் பாதிக்கப்படாத தாவர விதைகளை பயன்படுத்த வேண்டும். போதுமான பாசன வசதிகளையும் செய்யவேண்டும்.  நடுவதற்கு முன் காப்பர் ஆக்சிகுளோரைடு அல்லது ஜீனாப் 0.3 சதவீதத்தில் வேர்த்தண்டினை 30 நிமிடம் மூழ்கவைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட தாவரத்தை சுற்றியுள்ள மண்ணை, காப்பர் ஆக்சிகுளோரைடு 0.25 சதவீதம் கொண்டு நனைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story