ஆரணியில் 2 நாட்களில் 85 ஏர்ஹாரன்கள் பறிமுதல்


ஆரணியில் 2 நாட்களில் 85 ஏர்ஹாரன்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 12 May 2022 6:09 PM IST (Updated: 12 May 2022 6:09 PM IST)
t-max-icont-min-icon

ஆரணியில் அதிகாரிகள் சோதனையில் கடந்த 2 நாட்களில் 85 ஏர்ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஆரணி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் தனியார், அரசு பஸ்களில் காற்று ஒலிப்பான் (ஏர் ஹாரன்) பொருத்தி, அதிக சத்தம் எழுப்பப்படுவதாக போக்குவரத்துத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது. 

அதன்பேரில் ஆரணி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சரவணன் தலைமையில் ஆரணி மோட்டார் வாகன ஆய்வாளர் முருகேசன் மேற்பார்வையில் அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக ஆரணி நகரில் தனியார் மற்றும் அரசு பஸ்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

அதில் மொத்தம் 85 பஸ்களில் பயன்படுத்தப்பட்ட காற்று ஒலிப்பான்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டருக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

Next Story