8 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைத்தது


8 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைத்தது
x
தினத்தந்தி 12 May 2022 6:26 PM IST (Updated: 12 May 2022 6:26 PM IST)
t-max-icont-min-icon

8 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைத்தது

ாராபுரம்
தாராபுரம் அடுத்த அலங்கியம் நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்ய தாமதம் ஆனதால் 8 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைத்தன. 
நெல்சாகுபடி
தாராபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் 11,800 ஏக்கர் நிலப்பரப்பளவில் சம்பா நெல் ஒவ்வொரு ஆண்டும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அறுவடை செய்யப்பட்ட நெல்களை கொள்முதல் செய்ய  அலங்கியம், தளவாய் பட்டினம், செலாம்பாளையம், சின்னக்காம்பாளையம், நஞ்சியம் பாளையம், குளத்துப்பாளையம் மற்றும் சத்திரம் ஆகிய 7 இடங்களில் அரசு கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. அலங்கியம் வட்டார பகுதியில் விவசாயிகள் அறுவடை செய்யப்பட்ட நெல்களை சாக்கு மூட்டையில் தைத்து வாகனங்களில் விற்பனைக்காக  8 ஆயிரம் நெல் மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர். இவைகளை ஆன்லைன் மூலம் பதிவு செய்து அதன் பிறகு விவசாயிகள் கொண்டுவந்த மூட்டைகளுக்கு பணம் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. 
அவ்வாறு விவசாயிகள் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யாததால் அந்த மூட்டைகளை வெட்டவெளியில் அடுக்கிவிட்டு சில விவசாயிகள் சென்றனர். அங்கு நெல் மூட்டைகளை மூடி வைப்பதற்கு போதுமான தார்ப்பாய்கள் மற்றும் பாதுகாப்பு நிலைகள் இல்லை.  இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அப்பகுதியில் பெய்த மழையில் நெல் மூட்டைகள் நனைந்து அவைகள் முளைத்து துளிர் விட்டுள்ளதால் விவசாயிகள் பெரும் நஷ்டமடைந்துள்ளனர். மேலும் மழையில் நனைந்த நெல் மூட்டைகளை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் நிலைய அதிகாரிகள் பாதி விலைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. 
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
கோரிக்கை
 தாராபுரம் அடுத்து அலங்கிய பகுதியில் விவசாயிகள் கொண்டுவரும் நெல் மூட்டைகளை ஆன்லைன் மூலம் பதிவு செய்த பின்பு அவைகளை லாரிகள் மூலம் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைப்பது வழக்கம். ஆனால் 15 நாட்கள் ஆகியும் வாகனங்களை அதிகாரிகள் ஏற்பாடு செய்யாததால் மழையில் நனைந்து நெல் மூட்டைகள் முளைப்பதற்கு முக்கிய காரணமாக உள்ளனர். மேலும் ஒரு மூட்டை நெல்லுக்கு லாரி வாடகை ஏற்று கூலி உள்பட விவசாயிகளிடமிருந்து அதிகாரிகள் ரூ.30  வசூல் செய்கின்றனர். ஆனால் லாரி வாடகைக்கு ரூ.16 மட்டுமே கொடுத்துவிட்டு மீதம் உள்ள ரூ. 14ஐ அதிகாரிகளே வைத்துக் கொள்வதாகாக விவசாயிகள் தரப்பில் குற்றம் குற்றச்சாட்டு வருகின்றனர். எனவே அரசு கொள்முதல் நிலையங்கள் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளுக்கு சராசரியாக உரிய விலை கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர். 

Next Story