வேலூர் அரசு மருத்துவமனையில் செவிலியர் தினவிழா


வேலூர் அரசு மருத்துவமனையில்  செவிலியர் தினவிழா
x
தினத்தந்தி 12 May 2022 6:33 PM IST (Updated: 12 May 2022 6:33 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் அரசு மருத்துவமனையில் செவிலியர் தினவிழா நடந்தது.

வேலூர்

தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனையில்  உலக செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. மருத்துவமனை கண்காணிப்பாளர் ஸ்ரீபிரியா தலைமை தாங்கினார். டாக்டர்கள் செந்தாமரைகண்ணன், மங்கையர்கரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். செவிலியர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை செவிலியர் வேளாங்கண்ணி செய்திருந்தார். முடிவில் செவிலியர் ஜெபகமல் நன்றி கூறினார்.

இதேபோல வேலூர் பென்ட்லேண்ட் மருத்துவமனையில் நடந்த விழாவுக்கு தலைமை மருத்துவர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார். டாக்டர்கள் ஷாலினி, ராதா, செல்வி முன்னிலை வகித்தனர். செவிலியர்கள் பலர் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதையடுத்து கேக் வெட்டி செவிலியர்களுக்கு டாக்டர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

Next Story