குடும்ப அட்டை விவரங்களை திருத்த சிறப்பு முகாம்
தாலுகா அலுவலகங்களில் குடும்ப அட்டை விவரங்களை திருத்த சிறப்பு முகாம் நாளை நடக்கிறது.
வேலூர்
பொது வினியோக திட்டத்தின் சேவைகளை அனைத்து மக்களுக்கும் வழங்கும் பொருட்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் சனிக்கிழமை பொது வினியோகத்திட்ட சிறப்பு குறைதீர்வு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை மற்றும் நகல் குடும்ப அட்டைக்கு மனு செய்தல், செல்போன் எண் பதிவு செய்தல், குடும்பத் தலைவர் புகைப்படம் மாற்றம் செய்தல் ஆகியவைகள் மேற்கொள்ளப்படும்.
மேலும், பொது வினியோகத்திட்ட பொருட்களின் தரம் குறித்த புகார்கள் இருப்பின் அதனையும் இம்முகாமில் அலுவலர்களிடம் தெரிவிக்கலாம்.
எனவே இந்தமுகாமில் மனுதாரர்கள் தங்களது கோரிக்கைகள் மற்றும் ஆவணங்களின் நகலுடன், தொடர்புடைய தாலுகா அலுவலகங்களில் அரசு வகுத்துள்ள கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தவறாமல் பின்பற்றி முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
இந்த தகவலை வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story