அரசு நர்சு வீட்டில் பணம் திருட்டு


அரசு நர்சு வீட்டில் பணம் திருட்டு
x
தினத்தந்தி 12 May 2022 6:41 PM IST (Updated: 12 May 2022 6:41 PM IST)
t-max-icont-min-icon

பெரியகுளத்தில் அரசு நர்சு வீட்டில் பணம் திருட்டு போனது.

பெரியகுளம்:

பெரியகுளம் அரசு மருத்துவமனையில், செவிலியர் கண்காணிப்பாளராக பணிபுரிபவர் மணிமொழி (வயது 58). இவர், மருத்துவமனை பணியாளர் குடியிருப்பில் வசித்து வருகிறார். கடந்த 10-ந்தேதி இவர், வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்று விட்டார். நேற்று முன்தினம் அவர் வீட்டுக்கு வந்தார்.
 
அப்போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு மணிமொழி அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த ரூ.5 ஆயிரம் திருடு போய் இருந்தது. 

மணிமொழி வெளியூர் சென்றிருந்ததை நோட்டமிட்டு, மர்ம நபர்கள் பணத்தை திருடி சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story