கோவை அரசு ஆஸ்பத்திரியில் செவிலியர் தினம் கொண்டாட்டப்பட்டது


கோவை அரசு ஆஸ்பத்திரியில் செவிலியர் தினம் கொண்டாட்டப்பட்டது
x
தினத்தந்தி 12 May 2022 7:01 PM IST (Updated: 12 May 2022 7:01 PM IST)
t-max-icont-min-icon

கோவை அரசு ஆஸ்பத்திரியில் செவிலியர் தினம் கொண்டாட்டப்பட்டது


கோவை

கோவை அரசு ஆஸ்பத்திரியில் செவிலியர் தினம் கொண்டாட்டப்பட்டது.

செவிலியர் தினம்

இங்கிலாந்தை சேர்ந்த பி்ளாரன்ஸ் நைட்டிங்கேல் என்பவர் போர்க்களத்தில் காயமடைந்த வீரர்களுக்கு சிகிச்சை அளித்தார். அவரின் தியாகத்தை கொண்டாடும் விதமாக அவர் பிறந்த நாளான மே மாதம் 12-ந் தேதி  ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச செவிலியர் தினமாக கொண்டாடப்படுகிறது.

 இதையொட்டி கோவை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள செவிலியர் பயிற்சி பள்ளியில் நேற்று செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது.

செவிலியர் பயிற்சி பள்ளி முதல்வர் வசந்தி வரவேற்றார்.  அரசு ஆஸ்பத்திரி டீன் நிர்மலா தலைமை தாங்கி  கேக் வெட்டினார். 

இதையடுத்து அவர், செவிலியர்களின் தேவைகளை பூர்த்தி செய்தால் உலக அளவில் அவர்களின் சேவை முன்னேறும் என்ற இந்த ஆண்டுக்கான செவிலியர் தின வாசகம் எழுதிய பலகையை திறந்து வைத்தார்.

நினைவுப்பரிசு

இதையடுத்து அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப் பட்டது. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகளுக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் டீன் நிர்மலா பேசும்போது, அதிக கவனம் எடுத்து நோயாளிகளை காப்பாற்றும் செவிலியர்களின் பணி சிறப்பு வாய்ந்தது. கொரோனா நேரத்தில் நோயாளிகளுக்கு  சிகிச்சை அளிக்க செவிலியர்கள் செய்த சேவை மகத்தானது மட்டுமின்றி போற்றுதலுக்குரியது என்றார்.

உறுதிமொழி

முடிவில் மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் சடகோபன் மற்றும் செவிலி யர் பயிற்சி பள்ளி மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் கோவை அரசு ஆஸ்பத்திரி செவிலியர்கள் சார்பில் கேக் வெட்டி செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது.

 ேமலும் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.


Next Story