பிவண்டி இறைச்சிக் கடையில் 65 ஆடுகள் பலி- மூச்சுத் திணறல் காரணமா?
பிவண்டி இறைச்சி கடையில், சிறிய அறையில் பூட்டப்பட்ட 65 ஆடுகள் மூச்சுத்திணறி பலியாகின.
தானே,
தானே மாவட்டம் பிவண்டி குண்டாவலி பகுதியில், இறைச்சி கடை ஒன்று உள்ளது. இந்த கடையில் உரிமையாளர் கடந்த 10-ந் தேதி இரவு 70 ஆடுகளை ரூ.6 லட்சத்திற்கு வாங்கி உள்ளார். இந்த ஆடுகளை கடையின் உள்ளே அடைத்து வைத்திருந்தார். மறுநாளான நேற்று முன்தினம் காலை உரிமையாளர் கடையை திறந்தார். அப்போது உள்ளே அடைத்து வைக்கப்பட்டு இந்த 65 ஆடுகள் பலியாகி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த கால்நடைத்துறை அதிகாரிகள், அங்கு சென்று பலியாகி கிடந்த 2 ஆடுகளின் உடல் மாதிரிகளை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பரிசோதனை அறிக்கையில், ஆடுகள் மூசு்சுத்திணறி பலியானதாக தெரியவந்தது. இருப்பினும், புனேயில் உள்ள ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர்.
இதுபற்றி தானே மாவட்ட கால்நடை வளத்துறை அதிகாரி டாக்டர் சாந்தூரே கூறுகையில், “சிறிய அறையில் அடைத்து இரும்பு ஷட்டர் போட்டு பூட்டி வைக்கப்பட்டு இருந்ததால், சரியான காற்றோட்ட வசதியின்றி ஆடுகள் ஒன்றன் பின் ஒன்றாக பலியாகி உள்ளது” என்றார்.
-----
Related Tags :
Next Story